Tuesday, February 7, 2017

                                                          மஞ்சள் காமாலை

பச்சிளம் குழந்தைகள் 5%மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கபடுவார்கள்.

சில குழந்தைகள் தாய் பாலில் உள்ள Bilirubin மஞ்சள் காமாலை (Breast Feeding Jaundice) ஏற்படும். இந்த வகையான மஞ்சள் காமாலையல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக தாய் பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும். 
தாய் பால் நிறுத்திய சில தினங்களில் Breast Feeding Jaundice குணமாகிவிடும்.

பச்சிளம் குழந்தைகள் சிலருக்கு மூன்றாம் நாள் மஞ்சள் காமாலை  நோய் ஏற்படும் இதனை physiological jaundiceஎனப்படும். இந்த வகையான மஞ்சள் காமாலை குழந்தைகளுக்குஎந்த வகையான தொந்தரவு கொடுக்காமல் சில தினங்களில் குணமாகிவிடும்.

இந்த வகை மஞ்சள் காமாலை ஒரு வாரத்திற்கு மேல் தொடர்ந்தால் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை கேட்க வேண்டும். அதை தவிர்த்து கிராமபுரங்களில் உள்ள பச்சிலை வைத்தியம் போன்றவற்றை மேற்கொண்டால் அது குழந்தையின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்.

குழந்தை பிறந்த அன்றே மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்படும் குழைந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இந்த காமாலை நோய் இரத்தில் உள்ள  Uncojugated Bilirubinஅதிகமாகுவதால் உண்டாகுகிறது.
இந்த வகை காமாலை மிகவும் ஆபத்தானது. மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் கட்டயாமாக பச்சிளம் குழந்தை இருக்க வேண்டும்.
இவ்வகை காமாலை வர பல்வேறு காரணங்கள் உள்ளன.

கல்லீரல், இரத்தம், என்ஜைம் கோளாறு போன்றவையாகும்.


காமாலை நோய்  பாதிக்கபட்ட குழந்தைகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

குழந்தைகளின் தலை மற்றும் கழுத்து பகுதி மஞ்சள் நிறத்தில் இருந்தால் Grade 1 காமாலை

உடலின் மேல் பகுதி முற்றும் தொப்புள் பாகம் வரை மஞ்சள் நிறத்தில் இருந்தால் Grade 2 காமாலை

உடலின் கீழ் பகுதி மற்றும் தொடை வரையில் மஞ்சள் நிறத்தில் இருந்தால் Grade 3 காமாலை

உடலின் கை மற்றும் கால் பகுதி மஞ்சள் நிறத்தில் இருந்தால் Grade 4 காமாலை

உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் பகுதி மஞ்சள் நிறத்தில் இருந்தால் Grade 5 காமாலை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
Grade 5 காமாலை நிலையில் Bilirubin - 25mg/dl அளவுக்கு மேல் உடலில் இருக்கும்.

Bilirubin அளவு 1.5mg/dl தான் இருக்க வேண்டும; Bilirubin அளவு அதிகமாகும் பட்சத்தில் அது மூளையை பாதிக்கும். எனவே பெற்றோர்கள் அலட்சியமாக இருக்க கூடாது.

மஞ்சள் நிறம் இருக்கம் இடத்தில் கட்டைவிரலில் அழுத்தி பார்க்க வேண்டும். அப்பொழுது எந்தளவிற்கு காமாலை பாதிப்புள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

காமாலை நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காலையில் ஏற்படும் இளம் வெயிலில் சிறிது நேரம் காண்பித்தல் சிறந்தது. விரைவில் குணமாக உதவும்.

காமாலை நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை விரைவில் மருத்துவரிடம் காண்பித்து எதனால் நோய் ஏற்பட்டடது என்பதனை அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

முறையான ஹோமியோபதி சிகிச்சை எடுத்து கொள்வதினால் குழந்தை மிக விரைவில் பக்கவிளைவுகளின்றி குணப்படுத்தலாம்.

Elavenii homoeo Speciality Clinic,
94/3 Thenamara street,
Vellore - 632 001
9486042660
ENCHANTED-HOLE-RIDICULOUS-HIGHLIGHT-SHINE-BE.
                          

No comments:

Post a Comment